
உச்சி வேளை
கையில் குடை இல்லை
காலில் செருப்பு இல்லை
பையில் பணம் இல்லை
கானல் நீரில் எங்கோ பார்த்து
பல நாட்கள் பயனித்து
தோளோடு தொள் கொடுத்த
தோழமை
முகத்தில் உள்ள வியர்வையை துடைத்து
முகத்தை முகர்ந்து
நட்பே நலமா என்க
சுட்டெரிக்கும் சூரியனும்
குளிரும் நிலவானது
நண்பனை ஆரத்தழுவி
நண்பா வா , காப்ப்பி சாபிடலாம் என்க
உண்மை நட்புக்குள் ஏன் வீண் உபசரிப்பு
உண்மை விளங்கியது
என் நட்பிற்கு என்னிடம் எதுவும் இல்லை
உண்மை நட்பை தவிர.
Nice one
ReplyDelete