Popular Posts

Monday, August 22, 2011

பின்னலாடை பிணைக்கைதிகள் !!!



பின்னலாடை பிணைக்கைதிகள் !!!

"திரு"ப்பூர்

மரியாதை மிகுந்த ஊர்

மரியாதை மிகுந்த மனிதர்கள் வாழும் ஊர்

பின்னலாடையில் பின்னி பினைந்த

பிணைக்கை கைதிகளாய் பிள்ளைகள்

சிப்டுகளால் சின்னாபின்னமான

சில்லரை சிறார்கள்

சாயப்பட்டறைகளில்

சாயங்கள் உடன் பல காயங்களுடன்

பிழைப்பை ஓட்டும் பிள்ளைகள்

கள்ளம் கபடம் இல்லா

"கன்று குட்டிகளை"

"காளைகளாக்கி"

காசு பார்க்க துடிக்கும்

கல் நெஞ்ச பெற்றோர்கள்

இதயம் வலிக்கிறது

இருந்தாலும் ஓர்

இதம், தொழிற்சாலை வாசலில்

”இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் இல்லை”

No comments:

Post a Comment