
காலையில்
சாலையில்
கலங்க வைக்கும் விபத்து,
விபத்தின் மடியில் ஒருவன்..
லிட்டர் ரத்தம் ஆறாய் ஓட
நூறு பேர் கூடி 108 அழைத்தும்
நூறு நிமிடம் ஆகியும் வரவில்லை 108
இறுதியில் வந்தது இறுதியானது..
உச்சு..... உச்சு .... என்று
உச்சு கொட்டி விட்டு
"யாரு பெத்த புள்ளையோ" என்று
ஒற்றை வார்த்தையை
ஒருமையில் உதிர்த்து விட்டு கிளம்பினேன் அங்கிருந்து. .
போலியான மனிதாபிமானம்,
மானம் கெட்ட மனிதாபிமானம். . .
Dr.Kalingar Karunanithi valha
ReplyDeleteசரியாகச் சொல்லியுள்ளீர்கள்!!!
ReplyDeleteஅருமையான சாட்டை அடி மானம் கெட்டவர்களுக்கு
ReplyDelete