Popular Posts

Wednesday, May 18, 2011

காதல் தேசம்




”திரு”ப்பூர் – திரு - திருமதி

பெண் மங்கையானாள்

நிச்சயம் ஆனது ஒரு

திரு திரு முழியுடன்
ஆம் அது

நிச்சயம்
நிச்சயம் செய்யப்பட்ட மணம்.,

இடையே
இடைவெளியில்
இனம் புரியாத உரசல்

தீ பொறி வார்த்தைகள் வார்த்தையின் சூடு மறைவதற்குள்
கொள்ளி வைப்தற்கு முன் ஏற்பாடாய் ..

எல் பீ ஜீ வெடித்த்து

பெண் பிணமானால்

திரு திரு முழிக்கோ மற்றுமொறு
திருமணம்.

பெண் என்ன ஆனாள் ??

காதலித்து
ஜாதி அளித்து
திருமணம்
செய்தாள் பெண்
திருப்பூர் வந்தாள்
திருப்பதி போனாள் மட்டும்
திருப்பம் வரும் என்பது பழைய மொழி
திருப்பூர் வந்து உழைத்தாலும்
திருப்பம் ( நல்ல) வரும்
திருப்த்தியும் செல்வமும் வரும்
தீராத பிரச்சனைகள் தீரும் இங்கு
தீண்டதகாதவர்கள் என்று எவரும் இல்லை . .
திருப்பூர் ஒர் காதல் தேசம்....

Wednesday, May 11, 2011

சாயுமோ சந்ததி ?




சாயுமோ சந்ததி ?

சாய்ந்த பைசா கோபுரத்தை

சாதனை என்ற பெயரில்

சரி செய்த நீ

சாலை விஸ்த்தரிப்பு என்ற பெயரில்

சாயும் மரங்களை

சமன் செய்வது எப்போது ? ? ?



சமன் செய்ய
மரம் வளர்போம்
மண் வளம் காப்போம்

Monday, May 9, 2011

ஓ சோனா





ஒ பெண்ணே
ஓ சோன் பெண்ணே
உன் திரை சீலையில்
எத்தனை . . . .
எத்தனை . . . .
ஓட்டைகள் . . .

அரை வினாடி இன்பத்திற்க்காக
ஆறாம் விரலாய்
சிக்ரெட் புகையினால்
ஓட்டையாகிறாய்

தொலைவில் இருக்கும் உன்னை
தொட ஆசை படும்
தொழிற்சாலை புகையினாலும்
ஓட்டை ஆகிறாய். . .

உலக மாந்தர்களின் மகதான உயிரை
உரியாமல் புற ஊதா கதிர்களில் இருந்து காக்கிறாய்

இது எத்தனை நாளுக்கு தான் முடியும்-------?

புகையை குறைப்போம்,
ஓ சோன் பெண்ணை வாழ வைப்போம். . . .
மரம்
வளர்போம்
மழை
பெறுவோம்.

Wednesday, May 4, 2011

தேவியர் இல்லம் திருப்பூர்: கல்வி -- பலமான ஆயுதம்

தேவியர் இல்லம் திருப்பூர்: கல்வி -- பலமான ஆயுதம்
மிக அருமை
காலத்தின் தேவை அறிந்து வரைந்த பதிவு
தொடரட்டும் நும் பணி
வாழ்க வளமுடன்

அம்புலி அழுகிறது



அம்புலி அழுகிறது

அன்பே ஆருயிரே
அன்னமே அம்புலியே
என் அமுதே
என்று அம்புலியை காண்பித்து அன்னம் புகட்டும்
என் அன்னபூரணி அம்மா
எனக்கு மட்டும் அன்னம் புகட்ட வில்லை
ஏன் என் அன்னபூரணி அம்மா . .
அழுகிறது அம்புலி பாப்பா. . . .