Popular Posts

Wednesday, February 15, 2012

இந்த மிசின் என்ன வெல கண்ணு !!!




இன்று காலை வழக்கம் போல ஒரு தனியார் பேருந்தில் அலுவலகம் சென்று கொண்டிருந்தேன், அப்போது 50 வயது மதிக்க தக்க ஒரு பெரியவர் என் சீட்டிற்கு அருகில் வந்து அமர்ந்தார், கொங்கு மண்டலத்திற்கு உரிய பொன் முறுவழுடன், என்னிடம் ஏன் கண்ணு கோபியா போறிங்க... என்றார்..

அதற்கு நான் செயற்கையான சிரிப்புடன் தலையசைத்தேன் . .
பஸில் "உன் நண்பன் போல யாரு மச்சான்"".... என்ற பாடல் காது மட்டும் இன்றி இதயம் அதிரும் படியாக ஒழித்து கொண்ருந்தது
நான் பாடலுக்கு ஏறார் போல தலை அசைத்து கொண்ருந்தேன்.

அந்த சமயத்தில் என் செல்போன் அதிர்ந்தது,
எதிர் முனையில் என் நண்பன் அவரது அலுவலக சம்பந்தமாக 5 நிமிடம் பேசினார், பேசி கொண்டிருக்கும் போதே அருகில் இருந்த பெரியவர் என்னிடம் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முற்பட்டார். நான் சைகையால் கொஞ்சம் பொறுங்கள்.... போன் பேசிவிட்டு , உங்களுடன் பேசுகிறேன் என்றேன்.
அதனை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என நான் புரிந்து கொண்ட போது. என்னை பரிதாபமான பார்வையுடன் மேலும் கீழுமாக பார்த்து கொண்டிருந்தார் ( நான் எதோ தனியாக பேசி கொண்டிருபது போல அவர் நினைத்து கொண்டு),
நான் போன் பேசி முடிக்கும் வரை என் முகத்தையம் காதையும் பார்த்து கொண்டிருந்த அவர்
என்னை பார்த்து ம் ம் .. கடவுள் ஏன் இப்படி உங்கள சோதிகிரானு தெரியல தம்பி ..
இந்த வயசுல இப்படியா ? . . என்றவரை

நான் ஐயா புரியவில்லை என்றேன், அதற்கு அவர் என் காதை பார்த்து ....
ஏன் தம்பி இந்த மிசின் என்ன வெல கண்ணு !!! என்றார்.
ஒரு நிமிடம் எனக்கு என்ன பதில் சொல்லுவது என்றே தெரிய வில்லை, எவ்வளவோ அடக்கியும் என்னால் சிரிக்காமல்
இருக்க முடியவில்லை,
என் காதில் இருந்த ப்ளுடூதை கையில் எடுத்து கொண்டு பெரியவரிடம் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து,
ஐயா இது அந்த (செவிட்டு ) மெசின் இல்ல , செல் போன்ல பேசிற மெசின் என்றேன், அவர் சிறிது நேரம் கழித்து புரிந்து கொண்டு , தப்பா கீது எதுவும் நெனைசிறாதிங்க தம்பி.

என் பேத்திக்கு காது கொஞ்சம் சரியா கேக்காது , அவளுக்கு டாக்டர பார்த்து ஒரு மெசின் வாங்கி கொடுத்தோம் ஆனா அவ அத காதுல மாட்டுறது கிடையாது , பெருசா இருக்காம் செவிட்டு மிசின் மாட்ரிகானு எலோரும் அவல கிண்டல் அடிகிரங்கலாம்,

அதான் நீங்க மாட்டி இருக்கிற மாதிரி ஒரு மெசின் கிடைசா நல்ல இருக்கும்னு பாத்தேன் அதான். ம் ம் ...

அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்த காலத்துலயும் இப்படி ஒரு பெரியவர் என்று நினைத்து கொண்டு , பஸ் அறுபது அடி சாலை வரும் போது அங்கு இருந்த ஒரு (hearing aid centre) கடையை காண்பித்து இங்கு அந்த மெசின் வாங்கலாம் என்று கூறி விட்டு ,

இந்த செவிட்டு மெசின் இல்ல இல்ல ப்ளுடூதை ஆன் லைனில் வாங்கி கொடுத்த நண்பர் ராம்ஸ் மற்றும் அதனை கட்டாயம் வாங்க சொன்ன நண்பர்களையும் மனதிற்குள் நினைத்து ( திட்டி!!! உன் நண்பன் போல யாரு மச்சான்.... ) கொண்டு பஸில் இருந்து இறங்கினேன்.