Popular Posts

Monday, July 18, 2011

பட்டாம் பூச்சு




பட்டு பட்டு

பட்டாம் பூச்சுகளுக்கு (பெண்கள்)

பட்டு நுழால் பட்டாடை

பரிதவிக்கிறது மனம்

பட்டு பூச்சுகளுக்கு,

உயிரை கொன்று

உயிரற்ற உறைகளில்

உயிர் நூலால்

உடை ஒன்று தேவையா- கேட்கிறது

பட்டாம் பூச்சு

புலன்களை மறைக்க

ஆடை தேவை

உயிரை கொன்று

உயிரை வளர்க்க வேண்டுமா?

மல்பெரி கேட்கிறது


நவரச ரசிகன்


ரசிகன்

"ரசி" த்தான் ரகளை ஆனது

"ருசி" த்தான் ருத்தர தாண்டவம் ஆனது

"பசி" த்தான் பரலோகம் சென்றான்

"குஷி" தான் நடிகனுக்கு

ரசிகனை ரசிக்க வில்லை

ரசம் குடிக்கும்

ரதிகளின் கனவு நாயகனுக்கு...

Sunday, July 17, 2011

வெயில் நட்பு, பாலிய சினேகிதம்




உச்சி வேளை

கையில் குடை இல்லை

காலில் செருப்பு இல்லை

பையில் பணம் இல்லை

கானல் நீரில் எங்கோ பார்த்து

பல நாட்கள் பயனித்து

தோளோடு தொள் கொடுத்த

தோழமை

முகத்தில் உள்ள வியர்வையை துடைத்து

முகத்தை முகர்ந்து

நட்பே நலமா என்க

சுட்டெரிக்கும் சூரியனும்

குளிரும் நிலவானது

நண்பனை ஆரத்தழுவி

நண்பா வா , காப்ப்பி சாபிடலாம் என்க

உண்மை நட்புக்குள் ஏன் வீண் உபசரிப்பு

உண்மை விளங்கியது

என் நட்பிற்கு என்னிடம் எதுவும் இல்லை

உண்மை நட்பை தவிர.

Wednesday, July 13, 2011

கிடா விருந்து



கிடா விருந்து

சில உறவுகள் மேம்பட

பல உயிர்களை கொன்று

பலரும் சேர்ந்து உண்ணும்

விருந்து

கிடா விருந்து. . .

மானம் கெட்ட மனிதாபிமானம்


காலையில்

சாலையில்

கலங்க வைக்கும் விபத்து,

விபத்தின் மடியில் ஒருவன்..

லிட்டர் ரத்தம் ஆறாய் ஓட

நூறு பேர் கூடி 108 அழைத்தும்

நூறு நிமிடம் ஆகியும் வரவில்லை 108

இறுதியில் வந்தது இறுதியானது..

உச்சு..... உச்சு .... என்று

உச்சு கொட்டி விட்டு

"யாரு பெத்த புள்ளையோ" என்று

ஒற்றை வார்த்தையை

ஒருமையில் உதிர்த்து விட்டு கிளம்பினேன் அங்கிருந்து. .


போலியான மனிதாபிமானம்,

மானம் கெட்ட மனிதாபிமானம். . .